ஒழிப்பதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி லெப்டிணன் லசந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் லசந்த ஜெயசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தினர், பாதுகாப்பு படையினர் ஆகியோர் சாதி, சமயம், இனம், மொழி பார்த்து தமது கடமைகளை செய்வதில்லை.
மேலும் இன்று நமக்கிருக்கின்ற பெரிய சவால் போதைவஸ்த்தை ஒழிப்பதாகும். அத்துடன் இளம் சந்ததியினரை போதைவஸ்த்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
இதனால் அனைவரும் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுப்படுத்துவதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.