பங்களாதேஷ் நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கப்பலொன்றினை சோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படை மற்றும் பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மதுவரி திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த கப்பலானது கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் கொக்கேன் அல்லது வேறு பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.