சீனாவின் வூகானில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக இராணுவத்தின் மிகப்பெரிய சி 17 விமானம் நாளை(வியாழக்கிழமை) செல்லவுள்ளது.
இந்த விமானத்தில் சீனாவுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
எத்தகைய பருவ நிலையிலும் மிகப் பெரிய அளவில் மக்களையும், தளபாடங்களையும் சுமக்க வல்லது இந்த விமானம்.
சீனாவுக்கு பெரும் திரளாக மருந்துகளை கொண்டு செல்ல உள்ள இந்த விமானம் அங்கிருந்து 100 இற்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர உள்ளது.
ஏற்கனவே இரண்டு தனி விமானங்கள் மூலம் வூகானில் இருந்த 640 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.