இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அயலான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.