ஆராயவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நிதித் திட்டம் ஆராயப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள அதிகாரி ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையுடனான புதிய நிதித் திட்டம் எவ்வாறு அமையும் என கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்