LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 3, 2020

உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிப்பு- தகவல் வெளியானது

உலகை மிரட்டிவரம் கொரோனா வைரஸூக்கு
தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள யுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 25இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 362 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,300 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தாய்லாந்து பாங்கொக்கில் உள்ள ராஜவிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு காய்ச்சல் மற்றும் எச்.ஐ.வி.இற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் கலவைகளைக் கொண்டு சிகிச்சையளித்ததில் அவரது உடல்நலம் நன்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIV இற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் ஆகியவற்றுடன் காய்ச்சல் எதிர்ப்பு மருந்து ஓசெல்டமிவிரை மருத்துவர்கள் இணைத்து இந்த சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக 12 மணிநேரத்தில் அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ராஜவிதி மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கிரியாங்ஸ்கா அட்டிபோர்ன்விச் தெரிவிக்கையில், “இது வைரஸூக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு உறுதியான முறையல்ல. ஆனால் இது நோயாளியின் நிலையை மேம்படுத்த உதவுகிறது.

இந்த முறையை ஒரு நிலையான சிகிச்சையாகப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க மேலும் ஆய்வுகள் தேவை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, HIV நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பயன்படுத்துவது குறித்து சீன அரசு சோதனை செய்து வருவதாக AbbVie என்ற மருந்து நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் வடக்கு சிகாகோவில் இயங்கிவரும் இந்த நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீன சுகாதாரத்துறை எச்.ஐ.வி.இற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பயன்படுத்துவது பற்றிய சோதனையில் ஈடுபட்டுள்ளது எனக் கூறியிருந்தது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7