தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு அணையின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “என்ஆர்சி, என்பிஆர்.இக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருக்கிறது. மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அரசால் திரும்ப பெறப்படுவது பற்றியும் பரிசீலித்து வருகிறோம்.
ராஜ்யசபாவில் காலியாகும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கட்சியின் தலைமை கூடி முடிவெடுக்கும். இதுபற்றிய தே.மு.திக பொருளாளர் பிரேமலதாவின் கருத்து அவரின் சொந்த கருத்தாகும்” எனத் தெரிவித்துள்ளார்.