சுற்றுப்பாதையில் செலுத்தும் என தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சர் முகமது ஜவாத் அசாரி தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு தாங்கள் ஒருபோதும் பயப்படவில்லை என்றும் இதனால் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை எனவும் கூறிய அமைச்சர், கடவுள் மீதான நம்பிக்கையுடன், இந்த வார இறுதிக்குள் ஜாபர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஈரான் விண்ணில் செலுத்திய இரண்டு செயற்கைக்கோள்களும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு புதிய முயற்சியில் ஈரான் களமிறங்கியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து வொஷிங்டன் 2018 இல் விலகியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தது.
மேலும் அணுசக்தி ஒப்பந்தம் வெகுதூரம் செல்லவில்லை என்றும் தெஹ்ரானின் ஏவுகணைத் திட்டத்தில் கட்டுப்பாடுகள் இல்லை என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை அடுத்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்த நிலையில் ஜனவரி 3 ஆம் திகதி அமெரிக்கா மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்திற்கு எதிராக ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு வழிகோலியமை குறிப்பிடத்தக்கது.