நிலைவரப்படி 28.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.க, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பிற்பகல் 2 மணி நிலைவரப்படி 28.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு மையங்களில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.