பதிவாகியுள்ளதாக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 3.0 ரிக்டர் அளவில் பதிவானது.
எனினும், குறித்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித பதிவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஒட்டாவாவிலிருந்து வடமேற்கே 100 கிலோமீட்டர் அல்லது கிரேஸ்ஃபீல்டில் இருந்து வடமேற்கே 26 கிலோமீட்டர் தொலைவில் உருவானதாகக் கூறப்படுகின்றது.
கியூபெக் மணிவாக்கியில், இதுவரை நான்கு பலவீனமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.