விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உயர் சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸினால் கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் கடந்த ஜனவரி மாத ஆரம்ப காலப்பகுதியில் இருந்து விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவில் உத்தியோகபூர்வமாக விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மாத்திரம் தற்போது, 78 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சீனாவில் புதிதாக 500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
27 ஆயிரத்து 323 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.