இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கலந்துரையாடலின்போது, புதிய கூட்டணியின் சின்னம் மற்றும் பெயர் தொடர்பான கருத்துக்கள், யோசனைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது எட்டப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேச விதானகே தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.