LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+28°C


















Friday, February 21, 2020

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறாவது நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறாவதாக ஒருவர் கொரோனா
வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃப்ரேசர் ஹெல்த் பிராந்தியத்தில் வசிக்கும் 30 வயதான ஒரு பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.

அவர் சமீபத்தில் ஈரானுக்கான பயணத்திலிருந்து திரும்பி வந்த நிலையிலேயே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஈரானுக்கு மட்டுமே விஜயம் செய்ததை அறிந்த அதிகாரிகள் ஆச்சரியப்பட்டதாகவும், டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் சமீபத்தில் ஈரானில் இரண்டு பேர் உயிரிழந்ததனையும், போனி ஹென்றி நினைவுக் கூர்ந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர். அண்மையில் முழுமையாக குணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7