விதித்துள்ள விவகாரத்தை, இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். ஹிருணிகா பிரேமசந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த அரசாங்கத்தரப்பினர், பிரச்சினைகளை உருவாக்கி அதன் ஊடாக ஆட்சிக்கு வந்தவர்கள் என்பது தற்போது நன்றாகத் தெரிகிறது.
அந்தவகையில், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் தங்கியிருந்த பகுதியில் தற்போது தனியான பிரதேச சபையொன்றை உருவாக்கியுள்ளார்கள்.
நாம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவில்லை. ஆனால், இதே செயற்பாட்டை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்தால், எவ்வளவு விமர்சனங்கள் வந்திருக்கும்?
குறைந்தது, இந்த செயற்பாட்டுக்கு ஒரு தேரரேனும் எதிர்ப்பினை வெளியிட்டிருப்பார்களா?- ஏன், இவ்வளவு கீழ் தரமான அரசியல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கம் கூறிய எந்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டுள்ளது? அனைத்தும் பொய்யான வாக்குறுகளாகத்தான் இருந்தது. எமது அரசாங்கத்தில் குறைகள் இருந்தாலும், மக்கள் நிம்மதியாக உணவு உண்டார்கள்.
இதேவேளை இராணுவத்தளபதி சவேந்திரசில்வாவின் விவகாரத்தை இராஜதந்திர ரீதியாகவே நாம் அனுகவேண்டும்.
அமெரிக்காவை குறைக்கூறும் இவர்கள், அமெரிக்காவிற்குத்தான் எமது நாட்டு பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை மறந்துள்ளார்கள்.
என்னதான் எதிர்ப்பினை வெளியிட்டாலும் நாம் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள முடியாது. அந்தவளவுக்கு நாம் வல்லரசு நாடு கிடையாது.
எனவே, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் பயணிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது நோக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.