பறிக்கப்பட்டதற்கு எதிரான மேன்முறையீட்டின் முதற்கட்டத்தை இழந்துள்ளார்.
20 வயதான ஷமிமா பேகம் இஸ்லாமிய அரசில் சேர்வதற்காக 2015 ஆம் ஆண்டு தனது 15 வயதில் லண்டனை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் பெப்ரவரி 2019 இல் சிரிய அகதிகள் முகாமில் கண்டுபிடிக்கப்பட்டார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் ஷமிமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமையை ரத்துச் செய்தார்.
திருமதி ஷமிமா பேகம், தேசமின்றி விடப்படாததால் அவருடைய குடியுரிமையைப் பறிக்க முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறப்புக் குடிவரவு மேன்முறையீட்டு ஆணையம் (SIAC) கூறுகையில்; இந்த வழக்கு தேசிய பாதுகாப்புச் சம்பந்தமானது. எனவே ஷமிமா பேகம் குடியுரிமைக்காக பங்களாதேஷுக்குத் திரும்பலாம் என்று தெரிவித்துள்ளது.
சர்வதேசச் சட்டத்தின் கீழ், குடிமக்களின் குடியுரிமையை பறிப்பது சட்டவிரோதமானது. அவ்வாறு செய்வது அவர்களை நாடற்றவர்களாக்கிவிடும்.
ஷமிமா பேகத்தின் தாய் பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்பதனால் அவர் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.
ஷமிமா பேகம் நாடற்றவராக உள்ளார் என்ற வழக்கை நிராகரித்த ஆணைக்குழு, அவர் பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று முடிவு செய்தது.
இருப்பினும், பெப்ரவரி 2019 இல், பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சகம் கூறியபோது, ஷமிமா பேகம் பங்களாதேஷ் குடியுரிமை பெற்றவர் அல்லர் என்றும் அவர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்றும் தெரிவித்தது.
திருமதி ஷமிமா பேகம் தற்போது வடக்கு சிரியாவில் உள்ள அகதி முகாமில் (Camp Roj) உள்ளார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் எடுத்த முடிவு ஷமிமா பேகமை மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கவில்லை என்று ஆணையம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பாயத்தின் முடிவை அறிவித்த நீதிபதி டோரன் பிளம் (Doron Blum); சிரியாவில் ஷமிமா பேகம் எவ்வாறு உள்ளார் என்ற கரிசனைகள் இருந்தபோதிலும், உள்துறை அமைச்சரின் முடிவை ரத்துச் செய்யவேண்டும் என்று அர்த்தமல்ல என்று கூறினார்.
இதேவேளை ஷமிமா பேகமின் சட்டக்குழு, இந்த ஆரம்பத் தீர்ப்பின் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.