அதிகரித்து வருவதால், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை, ‘பாண்டமிக்’ என மருத்துவத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை ‘பாண்டமிக்’ என அறிவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மாத்திரம் தற்போது, 78 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சீனாவில் புதிதாக 500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
27 ஆயிரத்து 323 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.