முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழக பொலிஸ் தலைமை அதிகாரி திரிபாதி தஞ்சையில் பொலிஸ் அதிகாரிகளுடன் சென்று கோயில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார்.
இது குறித்து அவர் இன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், “தஞ்சை பெரிய கோயிலில் நாளை நடைபெறும் கும்பாபிசேக விழாவில் 5 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணிக்கு திருச்சி மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பொலிஸார் வருகைதந்துள்ளனர். திருச்சி மண்டல தலைமை பொலிஸ் அதிகாரி அமல்ராஜ் தலைமையில் 5,500 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி கும்பாபிசேகத்தைக் காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.