பெறுமதிமிக்க பொருட்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் லண்டனில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள நிரவ் மோடியின் சொத்துக்களின் ஒரு பகுதி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து தற்போது மீண்டும் நிரவ் மோடிக்கு சொந்தமான சொகுசு கார்கள், ஓவியங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 112 விலையுயர்ந்த பொருட்கள் நேரடியாகவும், 72 பொருட்கள் மார்ச் மாதம் 3 மற்றும் 4-ந் திகதிகளில் இணையத்தின் மூலமும் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை அமுலாக்கத்துறை சார்பில் ‘ஷப்ரான்ஆர்ட்’ என்ற நிறுவனம் ஏலத்தில் விற்பனை செய்கிறது.
குறித்த ஏல விற்பனையில் நிரவ் மோடியின் விலை உயர்ந்த வைர கைக்கெடிகாரங்கள் மற்றும் சொகுசு கார்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வகையிலான ஒரு சொகுசு கார் மட்டும் 95 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போகும் என கணிக்கப்பட்டுள்ளது.