பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நைன்வே, சலாவுத்தீன், டியாலா, அன்பர், கிர்குக் ஆகிய பகுதிகள் பாதுகாப்பற்றவை என்றும் ஈராக் செல்லும் இந்தியர்கள் பாக்தாதில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆலோசனையைப் பெறுமாறும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்த பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதல்களால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.
வேலை நிமித்தமாகவும் பணி உரிமம் பெற்றதாலும் ஈராக் செல்வோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மட்டும் செல்லுமாறு வெளியுறவு அமைச்சக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவுக்கு ஈராக்கில் இருந்து சாலை வழியாக பயணிப்பதைத் தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.