அதிகரிக்கப்படாது என மின்வலு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கண்டிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் கூறகையில், “ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள் செலுத்தப்படவில்லை. அவை நிலுவையில் உள்ளன.
குறிப்பாக வங்கிக் கடன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கான கொடுப்பனவு என எதனையும் செய்யவேண்டாம் என இலங்கை மின்சார சபைக்குக்கூட கடந்த ஆட்சியில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இதனால் மின்சார சபையால் செலுத்த வேண்டிய பல பில்லியன் ரூபாய் கட்டணம் நிலுவையில் உள்ளது.
கடந்த ஆட்சியால் கொடுப்பனவுகள் வழங்கப்படாததன் விளைவாகவே நிலுவைச் சுமையை சுமக்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கான கொடுப்பனவுகளை வழங்கும் நோக்கிலேயே கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருந்தாலும் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமானவர்களே ஒப்பந்தக்காரர்களாக செயற்பட்டனர். அவர்களின் சகாக்களுக்கு கட்டணம் செலுத்த நாம் முயற்சித்தோம். அதனை தடுத்துநிறுத்தியுள்ளனர். எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைத்துவிடும்.
இதேவேளை, பொதுத்தேர்தலில் பாரிய கூட்டணி அமைத்து பலமான வேட்பாளர்களையே களமிறக்குவோம். கண்டி மாவட்டத்தில் 10 பேர் போட்டியிடுவோம். அதில் எட்டு ஆசனங்களைக் கைப்பற்றுவது உறுதி.
ஐக்கிய தேசியக் கட்சி சஜித் அணி, ரணில் அணி, கரு தரப்பு என மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளன. மூன்று அணிகள்கூட தேர்தலில் போட்டியிடலாம். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
இதேவேளை, இந்த அரசாங்கம் இரண்டு மாதங்களாக என்ன செய்தது என எதிர்க் கட்சித் தலைவர் கேட்கின்றார். ஆனால் ஐந்து ஆண்டுகளாக அவர்கள் என்ன செய்தார்கள் என நாம் கேட்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.