அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற கலவரத்தில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த சோனியா காந்தி, மத்திய அரசும், உள்துறை அமைச்சரும் செயலற்று இருந்ததால் கலவரம் தொடர்ந்து நடத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவிநீக்கம் செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.