நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
வைத்திய சிகிச்சைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த அவர் சுமார் 3 மாதங்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
மக்களுக்கான பணிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு வலுவான நாடாளுமன்றம் அவசியம் எனக் கூறினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியை இணைத்து பொதுஜன பெரமுன போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற, பொருத்தமான சின்னம் பயன்படுத்தப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.