இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து குறித்த மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவரே மேற்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் கஞ்சன்காடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இதுவரை 360 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது