இந்த அரசாங்கத்தின் மீதான நமபிக்கையை மக்கள் இழந்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி லால் விஜயநாயக்க, நாடு பல்வேறு துறைகளில் குறைபாடுகளை எதிர்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் நாடாளுமன்றத்தில் 2/3 வது பெரும்பான்மை இல்லாததால் சில நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்று கூறி அரசாங்கம் சாக்குபோக்குக்களை கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் பொதுமக்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன, அரசாங்கம் செய்யத் தவறியதன் விளைவாக அல்ல, மாறாக நியாயமற்ற நியமனங்களை வழங்குவது போன்ற சில நடவடிக்கைகளால் என அவர் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதும் நீதித்துறை மீதும் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.