பாதிப்பும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது டெல்லி வன்முறை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், இந்த வன்முறையால் முதலீட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சவுதி அரேபியா முதலீட்டாளர்கள் இந்தியாவில் கூடுதல் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸால் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அடுத்த 2 மாதங்களில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் கச்சா பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தெரிவித்த அவர், இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு தொழில் துறைக்கு உதவலாம் என்பது குறித்து சிந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.