குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள பலரை பொலிஸார் தேடியும் வருகின்றனர்.
உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் துணையில்லாமல், அதுவும் தேர்வாணையம், தலைமைச்செயலகம், தேர்வு மையங்கள், போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் என பல தரப்புகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
ஆனால், பதிவறை எழுத்தர், வாகன ஓட்டுநர் என இந்த வழக்கில் இதுவரை கைதாகி உள்ளவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்களே. இவர்களை கணக்கு காட்டிவிட்டு, முறைகேட்டின் மூலகாரணமான பெரிய முதலைகளைத் தப்பிக்க வைக்கும் வேலைகளில் சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் இறங்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
எனவே இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சி.பி.ஐ. பொலிஸார் விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.
இந்த 2 கோரிக்கைகளையும் முன்வைத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.