கிடைக்கப்பெற்றால், மக்களை கடுகளவுகூட மதிக்கமாட்டாரென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்தறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்க அதிகாரி ஒருவரின் விவகாரத்தில் நவீன் திஸாநாயக்க நடந்துகொண்ட செயற்பாடு அருவருப்பானது.
அதாவது கம்பாஹாவில் ஒரு மாநில மந்திரி, ஒரு வனவிலங்கு அதிகாரிக்கு மிரட்டுவது போன்றுதான் நவீன் திசாநாயக்க அரசாங்க அதிகாரியை அச்சுறுத்திய செயற்பாடு காணப்படுகின்றது.
மேலும் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடும் அமைச்சர்களை அரசியலில் இருந்து நிராகரிக்க வேண்டும்.
அத்துடன் மக்களின் வாக்குகளினால் ஆட்சிக்கு வந்துவிட்டு, தனக்கு கீழ் அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற வேண்டும் என அவர் எண்ணுகின்றார். இவைதான நவீன் திஸாநாயக்கவின் கருத்தின் ஊடாக வெளிப்படுகின்றது.
மேலும் அவருக்கு அதிகாரம் தற்போது இல்லாத நிலையில் இவ்வாறு செயற்படும் இவர், பலம் அதிகம் கிடைத்துவிட்டால் எவ்வாறு செயற்படுவார் என்று மக்கள்தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியின் தவைராக நவீன் திசாநாயக்க சிலவேளை தெரிவு செய்யப்பட்டால் மக்கள் கூட கடுகுப்போன்றுதான் தெரிவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்