அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் இடம்பெற்ற போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அறிவித்திருக்கிறது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை, போருக்குப் பிறகு அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால் ஈழப் போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆகியும் ஈழத்தில் தமிழர்கள் அச்சமின்றி வாழும் நிலை ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மையாகும்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ள பல புள்ளிவிவரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்கின்றன. ஈழப்போர் முடிந்து இரு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தும் கூட இன்னும் ஈழத்தமிழர்கள் முழுமையாக அவர்கள் முன்பு வாழ்ந்த பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
ஈழத் தமிழர்களின் நிலங்கள் அவர்களிடம் முழுமையாக திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தினர் இன்று வரை வெளியேற்றப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களை தினேஷ் குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார்.
ஈழப்போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுக்கவில்லை.
ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவர்களின் உறவினர்களுக்கும் இப்போதுள்ள ஒரே ஆறுதல் இலங்கை போர்க்குற்ற விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் உறுதியாக இருப்பதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.