LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+30°C


















Wednesday, February 19, 2020

கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவிக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம
நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோவிளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பன குற்றச்சாட்டுக்களை அடுத்து இவர்களுக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியபோது கைது செய்யப்பட்டனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் வகையிலான 10 விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, அதனை அவுஸ்திரேலியாவின் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிட்டு நிதி தூய்தாக்கலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7