LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 28, 2020

அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய

அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை
முற்றுப்புள்ளி வைப்போம் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனவே, அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்ட நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குக் கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். அவ்வாறு இடம்பெற்றால் நாடாளுமன்றம் வரும் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என நம்புகின்றோம்.

தேர்தலுக்குப் பின்னர் அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கிய நாட்டின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்க மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.

ஏனெனில் கடந்த 25 வருடங்களாக நாட்டில் ஆட்சி செய்த கட்சிகள் அடிப்படைவாதிகளுக்கு முன்னால் தலைகுனிந்தன. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட ஆசனங்களை வைத்துக்கொண்டு, ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி அவர்களின் அடிப்படைவாதத்தை அதிகரித்துக்கொண்டனர். அவ்வாறான அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்.

அத்துடன் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் கல்வி அமைச்சராக பதியுதீன் மொஹமத் இருந்தார். அதேபோன்று பாக்கீர் மாக்கார் சபாநாயகராக இருந்தார். யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

கதிர்காமரை பிரதமாரக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் தெரிவித்தனர். அப்போது நாட்டில் இனவாதம் இருக்கவில்லை. அதனால் தேசிய வாதத்தையும் இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றையும் குழுப்பிக்கொள்ளக் கூடாது.

ஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் நாடாளுமன்றம் முற்றாக அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்துக்குக் கீழ் இருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆட்சியாளர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு கீழ்படிய வேண்டிய நிலையே இருந்தது.

உதாரணமாக உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அனுமதித்துக்கொள்ளும்போது சிலர் வாக்களிக்க மறுத்து சென்றுவிட்டனர்.

இறுதியில் அந்த அடிப்படைவாதிகளை வரவழைத்து, அவர்களுக்குத் தேவையான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொடுத்தே அந்த சட்ட மூலத்தை அனுமதித்துக்கொள்ள முடியுமாகியது. அந்த நிலைமைக்கு நாடாளுமன்றம் சென்றுவிடாமல் பாதுகாக்க எதிர்வரும் தேர்தலில் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7