இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டமையினால் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவர்களை தனிமைப்படுத்தி, 14 நாட்களுக்கு அவதானிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர்வரும் சித்திரை புத்தாண்டு நிகழ்வுக்காக தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருக்கும் பெரும்பாலான இலங்கையர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறியும் பொருட்டு, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி அவதானிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 17 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 655 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.