ஆன்டிபயாடிக்ஸ் விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில் மருந்து மூலப் பொருட்கள் விநியோகம் பாதிப்பால் இந்தியாவில் மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்தது.
இந்தக் குழுவினர் விட்டமின் குளோராம்பெனிகால், நியோமைசின், அசித்ரோமைசின், க்ளிண்டாமைசின், பி1, பி2, பி6 உள்ளிட்ட 12 அத்தியாவசிய மருந்துகளின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்கான சட்ட விதிகளை செயல்படுத்த மாநில அரசுகளை வலியுறுத்துமாறும், பதுக்கல்காரர்கள் மற்றும் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துவோருக்கு எதிராக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிபுணர் குழு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.