
வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்வரும் வியாழக்கிழமையில் இருந்து இந்த வழக்கு மீதான விசாரணை இடம்பெறும் என நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதான விசாரணையும், மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரமும் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மாதம் இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
