தெரிவித்துள்ளார்.
இந்தியா -தென்கிழக்கு ஆசிய நாடுகளுகளுக்கு இடையிலான கடல் சார்ந்த பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டும் சர்வதேச கருத்தரங்கை இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கலாசார, வர்த்தகத் தொடர்புகள் பழங்காலம் தொட்டே இருந்துவந்தது. ஆனால் வரலாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அதனை மீட்டு உருவாக்கம் செய்தல் அவசியம். தமிழகத்திலும் தவறான தகவல் தொடர்பு காரணமாக வரலாறு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாறு நிறைய மறைக்கப்பட்டுள்ளது.
கடல் கடந்த தமிழர் பெருமைக்குச் சான்றாக மகாராஷ்டிர துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழனுக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலோ எதிர்ப்புப் பிரச்சாரமே அதிகம். மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.