மற்றும் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு அழியக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு இது தொடர்பான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
உலகெங்கிலும் 19 பருவ நிலைகள் உள்ள இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, குறித்த இடங்களில் பருவ நிலைகளில் ஏற்படும் மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் 50 வருடங்களில் உலகில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிய உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு காலநிலை மாறுபாட்டால் மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கின்றனர். ஆனால் விலங்குகளாலும், தாவரங்களாலும் அவ்வாறு இடம்பெயர முடியாததால் அவை அழிவைச் சந்திக்கின்றன.
மேலும், வெப்பநிலை அதிகரிக்கும்போது தாவரங்களால் தாங்க முடிவதில்லை. இதன் காரணமாக அவை அழிவைச் சந்திக்கின்றன என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவு, சுமார் 10 வருட இடைவெளியில் 581 இடங்களில் உள்ள 538 உயிரினங்களிடம் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.