யாழ்.மாவட்ட ஆணையாளர் எஸ்.செல்வரஞ்சன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ். மத்திய கல்லூரி மாணவர்களின் பான்ட் இசை வாத்தியத்துடன் சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் மாணர்களினால் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பாடசாலை வளாகத்தில் சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸிற்காக புதிய அறை ஒன்றை அதன் தலைவர் சரத் சமரகே மற்றும் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எமில்வேந்தன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
அதன்பின்னர், கடந்த ஆண்டு சிறந்தமுறையில் அம்பியூலன்ஸ் பாசறையில் பயிற்சி பெற்ற மற்றும் சேவையாற்றிய மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டதுடன், சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தலைவருக்கான சின்னமும் சூட்டப்பட்டது.