சி.சி.ரி.வி.கமெராக்களை கழற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த 4 பேரில் பௌத்த பிக்கு மாணவர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
களனி பல்கலைக்கழக சி.சி.ரி.வி கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 16 பேர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அதில் 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய நான்கு பேரும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, களனி பல்கலைக்கழக சி.சி.ரி.வி.கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இனங்காணப்பட்ட 25 மாணவர்களுக்கு இரண்டு வருடங்கள் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக தொடர்பாடல் மற்றும் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது