உயர்வடைந்துள்ளது.
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது
குறித்த தாக்குதலால் ஏற்கனவே 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சைப்பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இருவேறு பேரணியில் இருதரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் வடகிழக்கு டெல்லியில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அங்குள்ள நிலைவரம் குறித்து மக்களிடம் கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.