பாலாகோட் முகாமில் 27 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாலாகோட்டில் உள்ள அந்த அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுவீசின.
இதன்போது அதிகளவான பயங்கரவாதிகள் உயிரிழந்திருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் அதே முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும், அங்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தலைவர் மசூத் அஸாரின் உறவினர் யூசுப் அஸார், 27 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறித்த பயிற்சி ஒருவாரத்தில் நிறைவடைய உள்ளதாகவும், அதன்பிறகு இந்தியாவுக்குள் ஊருருவும் செயலில் 27 பேரும் ஈடுபடலாம் எனவும் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.