விபத்திற்குள்ளானதில் 10 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானின் புந்தி மாவட்டத்தில் கோடாவில் இருந்து தவுசா பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து, பாலத்தின் மீது பயணித்தபோது நிலை தடுமாறி மைஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த பேருந்தில் மொத்தம் 28 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 10 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் திருமண விருந்தில் கலந்துகொள்வதற்காக அதிகாலையில், பேருந்தில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் கோடா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
ஆற்றில் கீழ் பகுதியில் அதிக நீர் நிறைந்த ஆழமான பள்ளம் இருந்ததும், பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் ஏதும் இல்லாமல் இருந்ததே விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என கூறப்படும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.