ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரிய இராணுவம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரிய போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகளும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் அரசு இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த சில வருடங்களில் ஈரானின் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு சிரியாவில் சில வருடங்களாகத் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் அத்துமீறி நுழைத்து துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலும் அவ்வப்போது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுக் கிளர்ச்சியாளர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதலால், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவை மட்டுமல்லாமல் இஸ்ரேல் மீதும் ஈரான் குற்றஞ்சாட்டியது.
எனினும், அப்போது இஸ்ரேல் மீது ஈரான் தனது கோபத்தை வெளிப்படுத்தியதற்கு என்ன காரணம் என உலக நாடுகள் சிந்தித்துக் கொண்டிருந்தன. தற்போது இவ்வாறான தாக்குதலே அந்த கோபத்துக்கு காரணமாக இருக்கலாமென கூறப்படுகின்றது.