நகரங்கள் பட்டியலில் டெல்லி 5வது இடத்தை பெற்றுள்ளது.
‘உலக காற்று தர அறிக்கை 2019’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நிறுவனம் உலகின் மோசமான காற்று மாசு நிறைந்த 30 நகரங்களை பட்டியலிட்டுள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் 21 நகரங்கள் உள்ளதாகவும், காசியாபாத் நகரம் (உத்தரபிரதேச மாநிலம்) முதலிடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் ஹோடான் நகரம் 2வது இடத்தையும், பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, பைசலாபாத் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களையும், டெல்லி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்திய அளவில் வரிசைப்படி 21 நகரங்கள் விவரம் வருமாறு:-
காசியாபாத், டெல்லி, நொய்டா, குருகிராம், கிரேட்டர் நொய்டா, பந்த்வாரி, லக்னோ, புலந்த்ஷர், முசாபர்நகர், பாக்பாத், ஜிந்த், பரிதாபாத், கோரவுட், பிவாடி, பாட்னா, பல்வால், முசாபர்பூர், ஹிசார், குடைல், ஜோத்பூர் மற்றும் மொராதாபாத்.
ஆனாலும் இந்திய நகரங்கள் முந்தைய ஆண்டை காட்டிலும் முன்னேறி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் மோசமான காற்று மாசு நிறைந்த தலைநகரங்கள் பட்டியலில் டெல்லிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.
நாடுகள் அளவிலான தகவலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் முதலிடத்திலும், அடுத்த இடங்களில் பாகிஸ்தான், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் நாடுகளும் உள்ளன