தவிக்கும் 21 இந்திய மருத்துவ மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கொச்சி வந்து சேர்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவர்கள் வெளியேறுவதற்கு விமான நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்ததை தொடர்ந்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரனின் உதவியுடன் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக குறித்த 21 பேரும் சிங்கப்பூர் வழியாக இந்தியாவர திட்டமிட்டு நேற்று காலை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். ஆனால் போர்டிங் பாஸ் பெற்ற பிறகும் அவர்களை விமானத்தில் ஏற்ற தாய் ஏர்லைன்ஸ் மறுத்துவிட்டதால் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து தாய் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திடம் மத்திய அமைச்சர் முரளிதரன் பேசி அவர்கள் இந்தியா திரும்ப உதவி செய்துள்ளார்.