14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவிலுள்ள கனேடியர்களை பாதுகாக்கவும், அங்குள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதற்கமைய, சீனாவின் வுஹானில் இருந்து 176 கனடியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில வன்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கிய விமானம், எரிபொருள் நிரப்பிக்கொண்ட ஒன்றாரியோ ட்ரெண்டனில் உள்ள கனேடிய படைகளின் தளத்திற்கு சென்றது.
இவர்கள் தற்போது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.