பொப் வீற்ரன் கடந்த ஆண்டு தனது 111 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.
ஜப்பானில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதரின் மரணத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட நபரான பொப் வீற்ரனே இப்போது உலகின் மிக வயதான மனிதராகக் கருதப்படுகின்றார்.
ஸ்கொட்லாந்தின் பேர்த்ஷையரிலுள்ள (Perthshire) செயின்ற் மடோஸைச் (St Madoes) சேர்ந்த அல்பிரட் ஸ்மித்தின் (Alfred Smith) மரணத்தின் பின்னர் பொப் வீற்ரன் பிரித்தானியாவின் மிக வயதான மனிதரானார்.
1908 மார்ச் 29 இல் பிறந்த பொப் வீற்ரன் கடந்த ஆண்டு கோடையில் இருந்து பிரித்தானியாவின் அதிக வயதுடைய மனிதராக இருந்து வருகிறார்.
உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்ற ஜப்பானியரான சிற்ரெற்சு வற்றனபே (Chitetsu Watanabe) கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 112 வது வயதில் உயிரிழந்தார்.