பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பேருந்து சாரதி உட்பட 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 20ற்கும் மேற்பட்டோர் பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதுளையில் கோர விபத்து – ஏழு பேர் உயிரிழப்பு 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!
பதுளை – பசறை, மடுல்சீமை பிரதான வீதியின் ஆறாம் கட்டைப்பகுதியில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, குறித்த பகுதியில் கடும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்குத்தான பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தினால் குறித்த பேருந்து இரண்டாக உடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.