அப்பர் வெலிங்ரனில் பகுதியில் பாதசாரியொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனச் சாரதியொருவரை, பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12:15 அளவில், இன்வெர்னஸ் அவென்யூ கிழக்கில் அப்பர் வெலிங்ரன் பகுதியில் நடந்துக் கொண்டிருந்த 29 வயதான ஆணொருவர் மீதே இவ்வாறு வாகனம் மோதியுள்ளது.
எனினும், இந்த விபத்தின் பின்னர், வாகனத்தால் மோதப்பட்ட அந்தநபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனம், அப்பர் வெலிங்ரனில் தெற்கே சென்று குயின்ஸ்டேல் அவென்யூ நோக்கி வலதுபுறம் திரும்பிச் சென்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இருண்ட எஸ்யூவி அல்லது வான் அந்த நபரைத் மோதியதாக சந்தேகிக்கும் பொலிஸார், இதுகுறித்துத் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.