கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2017 மற்றும் 2018இல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்த மனுத்தாக்கல் இன்று (சனிக்கிழமை) செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவில், நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான இணையத்தள விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விண்ணபிப்பதற்கு நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.