குளிர்காலப் புயல் வீசும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வானிலை எச்சரிக்கையில் இந்த விடயத்தினை கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மெட்ரோ வன்கூவர், வன்கூவர் தீவின் சில பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் தெற்கு கடற்கரைகளில் பலத்த மழை பெய்யும் அதே நேரத்தில் பனி, காற்று அல்லது உறைபனி மழையை மற்ற பகுதிகளுக்கு கொண்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த புயல் காற்றினால் மின்தடை ஏற்படலாம் என்றும், அதனை அறிந்து மக்கள் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெருங்கி வரும் புயல் முதலில் மத்திய கடற்கரை மற்றும் வடக்கு வன்கூவர் தீவைத் தாக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.
100 முதல் 150 மில்லி மீற்றர் மழை பொழிந்து, பின்னர் மாகாணம் முழுவதும் தீவிரமடைந்து, பனி மற்றும் மழையை இந்தப் புயல் சுமந்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.