பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ரஜோரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தானது, வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில் அறுவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.